அரசியல்,செய்திகள் ஜெயலலிதா பிரதமரானால் ஆதரவு – மம்தா பானர்ஜி…

ஜெயலலிதா பிரதமரானால் ஆதரவு – மம்தா பானர்ஜி…

ஜெயலலிதா பிரதமரானால் ஆதரவு – மம்தா பானர்ஜி… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு பேட்டியில் கூறுகையில் “நான் ஒரு பெண்ணியவாதியாக இருப்பதை விட மனிதநேயமிக்கவளாக இருப்பதையே விரும்புகிறேன்.

நான், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ஆகியோர் அரசியல் பலம் வாய்ந்த பெண்மணிகள் என்பதால், ஒன்றாக பணியாற்ற மாட்டோம் என்று அனைவரும் முடிவு செய்வது தவறு. நாட்டிலுள்ள பெண் தலைவர்கள் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை எனது சகோதரிகளான ஜெயலலிதா மற்றும் மாயாவதிக்குத்தான் உள்ளது.எனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை. மக்கள் நலனே முக்கியம். ஒருவேளை ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு இருந்தால் நான் அவருக்கு ஆதரவு அளிப்பேன். ஏற்கனவே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். மேற்கு வங்க முதலமைச்சர் பதவியே எனக்கு போதுமானது.

ஆகவே நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஆட்சி அமைக்கும் எந்த கட்சிக்கும் நான் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நரேந்திர மோடியை மட்டும் நான் ஆதரிக்க வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி