அரசியல்,செய்திகள் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப் பதிவு!…

கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப் பதிவு!…

கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப் பதிவு!… post thumbnail image
அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 5-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், வாகனங்கள் புடைசூழ குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்த கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் இது போன்று வாகனங்கள் புடைசூழ சுற்றுப்பயணம் செய்வது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும் என எச்சரித்த போலீசார், சுமார் அரைமணி நேரத்துக்கு பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.தன்னுடன் வந்த வாகனங்களில் ஊடகங்களின் கார்கள்தான் அதிகம் என்றும், அது அரசியல் ஊர்வலம் இல்லை என்றும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையில், காவல்துறையிடம் முன்னதாக அனுமதி பெறாமல், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி 3-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சென்ற கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.தேர்தல் ஆணையமும் கெஜ்ரிவாலின் குஜராத் சுற்றுப்பயணம் தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு அனுமதி அளித்தது.இதனையடுத்து, கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் அருகே உள்ள ரிஷப் வட்டத்தில் முன் அனுமதி பெறாமல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி பொதுக்கூட்டம் நடத்தியதன் மூலம் தேர்தல் விதிமுறையை மீறிய அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கட்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் திபக் மெகானி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி