செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு மீண்டும் 2012 ம் ஆண்டின் செண்டிமெண்ட் வருமா?…

விஜய்க்கு மீண்டும் 2012 ம் ஆண்டின் செண்டிமெண்ட் வருமா?…

விஜய்க்கு மீண்டும் 2012 ம் ஆண்டின் செண்டிமெண்ட் வருமா?… post thumbnail image
சென்னை:-துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் விஜய்யின் 57 வது படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. கொல்கத்தா, சென்னை விமான நிலையம், ஆந்திராவின் ராஜமுந்திரி ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படக்குழுவினர் ஒரு சின்ன ஓய்வு எடுத்து வருகின்றனர்.

இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. விஜய் -சமந்தா பாடல் காட்சி ஒன்றுக்காக இந்த படக்குழு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருக்கின்றது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்துள்ளார். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருகிறது.

கடந்த 2012ஆம் வருடம் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் ஆகியது. அதேபோல இந்த 2014ஆம் வருடம் பொங்கலுக்கு ஜில்லா மாபெரும் வெற்றியை பெற்றது போல தீபாவளிக்கு வரும் விஜய்யின் 57வது ரிலீஸ் ஆகிறது. 2012ஆம் ஆண்டின் ராசி மீண்டும் திரும்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி