செய்திகள்,திரையுலகம் லிப்கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய விஷால்!…

லிப்கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய விஷால்!…

லிப்கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய விஷால்!… post thumbnail image
சென்னை:-விஷால் பிலிம்பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தற்போது தயாராகி வரும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என தெரிகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட லிப் கிஸ் காட்சி ஒன்று பரபரப்பாக சில நாட்களுக்கு முன் பேசப்பட்டது.கிளாமராக நடிக்கவே தயங்கும் லட்சுமி மேனன் எப்படி லிப் கிஸ் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதே கோல்வுட்டின் ஆச்சரியமான கேள்வி. இதற்கு நேற்று லட்சுமி மேனன் விளக்கம் கொடுத்தார்.
படத்தின் கதைக்கு இந்த லிப் கிஸ் மிக முக்கிய என்று இயக்குனர் திருவும், விஷாலும் வற்புறுத்தினர். நான் தயங்கியதை பார்த்த விஷால் என்னுடைய நட்பை நீ இழக்காமல் இருக்க வேண்டுமானால் இந்த காட்சியில் நடித்துதான் ஆகவேண்டும் என வற்புறுத்தியதால் அந்த காட்சிக்கு சம்மதம் தெரிவித்தேன்.

படம் பார்த்தபிறகுதான் அந்த காட்சி எந்தளவுக்கு முக்கியம் என்று எனக்கு புரிந்தது என்று கூறினார்.இயக்குனர் திரு ஏற்கனவே விஷாலுடன் தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களுடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஷால் மற்றும் திரு இணையும் மூன்றாவது படம் ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி