செய்திகள்,திரையுலகம் ரஷ்ய மொழி படத்தில் நடிக்கும் நடிகை லட்சுமி மேனன் தந்தை!…

ரஷ்ய மொழி படத்தில் நடிக்கும் நடிகை லட்சுமி மேனன் தந்தை!…

ரஷ்ய மொழி படத்தில் நடிக்கும் நடிகை லட்சுமி மேனன் தந்தை!… post thumbnail image
சென்னை:-கும்கி படத்தில் லட்சுமி மேனனின் பாசம் மிகுந்த அதே நேரத்தில் தங்கள் இனத்தின் கட்டுப்பாட்டை கட்டிக்காகும் வீரம் மிகுந்த கேரக்டரில் நடித்த நடிகர் ஜோ மல்லுரியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் ஜோ மல்லுரி மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

கும்கி படத்திற்கு பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் ஜில்லா மற்றும் விஜய் சேதுபதியின் ரம்மி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்பது பலருக்கு தெரியாத உண்மை.
தற்போது ஜோ மல்லுரி ரஷ்ய மொழி டாக்குமெண்டரி படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

கம்யூனிசத்தை தோற்றுவித்த கார்ல் மார்க்ஸ் குறித்து ரஷ்யாவில் எடுக்கப்பட்டு வரும் ஒரு டாக்குமெண்டரி படத்தில் நடிக்க இவர் தகுதி பெற்றுள்ளார். அதில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்காக இவருக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் திருப்தி அடைந்த ரஷ்ய இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்.சினிமாவில் அறிமுகமாகி மூன்று படங்கள் நடிப்பதற்குள் உலக அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்றுவிட்ட ஜோ மல்லுரியை பார்த்து கோலிவுட் அதிசயப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி