சிம்பு -ஹன்சிகாவை சேர்த்து வைத்த செல்வராகவன்!…

விளம்பரங்கள்

சென்னை:-சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக நடித்து அதன்பின்னர் காதல் கொண்டனர். திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டு, தற்போது மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றனர். காதல் வேறு தொழில் வேறு என்று விளக்கம் கொடுக்கும் சிம்பு இந்த பார்முலாவை மீண்டும் தற்போது செயல்படுத்தி வருகிறார்.

வாலு படப்பிடிப்பின்போது ஹன்சிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக தெரிவித்தனர். பின்னர் நயன் தாராவுடன் சிம்பு மீண்டும் நடித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை விட்டு பிரிந்துவிட்டதாக ஹன்சிகா அறிவித்தார். சிம்புவும் நான் இப்பொழுது சிங்கிள் எனடுவிட்டரில் அறிவித்து தனது காதல் முறிவை உறுதி செய்தார். ஆனால் வாலு படம் தவிர மேலும் ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். காரணம் கேட்டால் முன்பு சொன்ன அதே பதிலை திரும்பவும் கூறுகிறார். அதாவது காதல் வேறு தொழில் வேறு என்று.

சிம்புவை வைத்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. அதுவும் சிம்பு ஹன்சிகாவை உருகி உருகி காதலிக்கும் ஜாலியான கேரக்டராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: