அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?…

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?…

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?… post thumbnail image
அகமதாபாத்:-டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுக்க அரவிந்த் கெஜ்ரிவாலை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளதா என்றே பரிசோதனை செய்தோம் என்று அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி