செய்திகள் மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!…

மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!…

மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சர்வதேச அளவில் பணக்காரர்களை கணக்கெடுத்தது. அப்போது 1,645 ஆண் மற்றும் பெண் கோடீசுவரர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதில், பில்கேட்ஸ் மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த படியாக மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் 2–வது இடம் பிடித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ. 4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாகும்.
மைக்ரோசர்ப்ட் நிறுவன பங்குகளின் விலை உயர்வால் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு அதிகரித்துவிட்டது. அதனால் மீண்டும் அவர் நம்பர்–1 இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி 18.6 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் 40-வது பணக்காரராக உள்ளார். அவரது சகோதரர் அனில் அம்பானி 5 பில்லியன் டாலருடன் 281-வது இடத்தில் உள்ளார். லண்டன்வாழ் இந்தியத் தொழிலதிபர் லஷ்மி மிட்டல் 16.7 பில்லியன் டாலருடன் 52-வது இடத்தில் உள்ளார்.முகநூல் நிறுவனர் மார்க் சூசர்பெர்க் இவ்வருடம் அதிக லாபம் ஈட்டியவர்களி்டத்தில் முதலிடத்தில் உள்ளார். அவரது வருமானம் இந்த ஆண்டு மட்டும் 15.2 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்நு 28.5மில்லியன் அமெரிக்கடாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி