செய்திகள்,திரையுலகம் பிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை!…

பிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை!…

பிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை!… post thumbnail image
எர்ணாகுளம்:-‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகும் லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 வணிகவியல் படித்து வருகிறார்.

அங்கு படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். படப்பிடிப்புகள் இருக்கும்போது பள்ளி நிர்வாகத்திடம் விசேஷ அனுமதி பெற்று விடுமுறையில் செல்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வகுப்புக்கு செல்கிறார்.

தற்போது தேர்வு நடப்பதால் படப்பிடிப்புக்கு ஓய்வு விட்டுள்ளார். நேற்று எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 தேர்வு எழுதினார். இதுகுறித்து லட்சுமிமேனன் கூறும்போது, ‘‘சினிமாவைவிட படிப்பு முக்கியம். இன்று ஆங்கில தேர்வு எழுதினேன். மொத்தம் ஐந்து பாடங்கள் எழுத வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தான் தேர்வு நடக்கிறது. படிப்பதற்கு இடையில் ஒருநாள் விடுமுறை கிடைக்கிறது’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி