செய்திகள்,திரையுலகம் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த ‘ஹைவே’ திரைப்படம் மாபெரும் வெற்றி!…

ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த ‘ஹைவே’ திரைப்படம் மாபெரும் வெற்றி!…

ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த ‘ஹைவே’ திரைப்படம் மாபெரும் வெற்றி!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன திரைப்படம் ஹைவே. இந்த திரைப்படத்தில் ரந்தீப் ஹூடா மற்றும் அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ஒரு பாடலுக்கு அலியா பட் உடன் முதல்முறையாக நடித்தும் இருக்கிறார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் அலியா பட்டுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆன பிறகு சுமாரான ரிசல்ட்தான் வந்தது. அதற்கு பிறகு நல்ல ஹிட் ஆகி, தற்போது மேலும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.18.25 கோடி ரூபாய். ஆனால் முதல் வாரத்தில் ரூ.15.50 கோடி வசூல் செய்துவிட்டது. தற்போது மேலும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருப்பதால் இதன் வசூல் இருமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றியின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் பாலிவுட் சம்பளம் பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.

Window Seat Films தயாரித்திருக்கும் இந்த படத்தினை யூடிவி நிறுவனம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வசூலை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி