ரஜினியுடன் மரணத்திற்கு பிறகும் நடிக்கும் நாகேஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-கோச்சடையான் படத்தில் நடிகர் நாகேஷும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மொஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படத்தில் வேறொரு நடிகர் நடித்து அந்த நடிப்பை மட்டும் அப்படியே மோஷன் கேப்சர் செய்து நாகேஷின் பழைய படத்தில் உள்ள உருவத்தில் இணைத்து நடிக்க வைத்ததாக இயக்குனர் செளந்தர்யா நேற்று அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாகேஷ் ஏற்கனவே தில்லுமுல்லு உள்பட பல திரைப்படங்களில் ரஜினியோடு நடித்திருக்கிறார் என்பதால் அவர்கள் இருவரது நடிப்பை மீண்டும் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருப்பதாக கூறப்படுகிறது.

மார்ச் 9ஆம் தேதி கோச்சடையான ஆடியோ ரிலீஸ் தினத்தில் வெளியாகும் கோச்சடையான் டிரைலரில் நாகேஷ் நடித்த சில காட்சிகளும் இடம்பெறும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: