செய்திகள்,திரையுலகம் விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…

விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…

விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘‘ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விக்ரமுக்கு ‘ஐ’ 50வது படம். மிகப் பெரிய அளவில் ‘ஐ’ வெற்றி பெறும் என நம்பிக் கொண்டிருக்கிறார், விக்ரம்.

அடுத்து ‘தில்’, ‘தூள்’ என்று இரண்டு பெரிய ஹிட் படங்களை தனக்குத் தந்த தரணி இயக்கத்தில் நடிக்கிறார்.படத்துக்கு ‘ராஸ்கல்‘ என்று டைட்டில் வைத்துள்ளனர்.இதில் த்ரிஷா அல்லது ஹன்சிகா ஆகிய இருவரில் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் படக்குழு இருந்தது.

தற்போது விக்ரமுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.’சாமி’, ‘பீமா’ படங்களில் நடித்த த்ரிஷா, மூன்றாவது முறையாக விக்ரமுடன் நடிக்கலாம் என்று நினைத்தார். ஆனால், ஹன்சிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் அப்செட்டில் இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி