செய்திகள்,திரையுலகம் கோடை விடுமுறையில் ஷங்கரின் ‘ஐ’ படம் வெளியீடு!…

கோடை விடுமுறையில் ஷங்கரின் ‘ஐ’ படம் வெளியீடு!…

கோடை விடுமுறையில் ஷங்கரின் ‘ஐ’ படம் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-விக்ரமின் ‘’ படம் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. வெளிநாடுகளிலும் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சீனாவில் சண்டை மற்றும் பாடல் காட்சிகளை எடுத்துள்ளனர். இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு இருந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்தியுள்ளார்.

இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. எமி ஜாக்சன் பங்கேற்கும் பாடல் காட்சியொன்று பாக்கி உள்ளது. இதை சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் அரங்கு அமைத்து படமாக்குகின்றனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறும் போது, படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. கோடை விடுமுறையில் படம் தயாராகிவிடும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி