செய்திகள்,திரையுலகம் உத்தமவில்லன் டீஸர்… காப்பிரைட் சட்டத்தில் சிக்கும் கமல்ஹாசன்!…

உத்தமவில்லன் டீஸர்… காப்பிரைட் சட்டத்தில் சிக்கும் கமல்ஹாசன்!…

உத்தமவில்லன் டீஸர்… காப்பிரைட் சட்டத்தில் சிக்கும் கமல்ஹாசன்!… post thumbnail image
சென்னை:-Eric Lafforgue என்ற பிரபலமான போட்டோகிராபர் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் கேரளாவின் மலபார் பகுதிகளில் வாழும் கலாச்சாரம் மிகுந்த மக்களின் புகைப்படங்கள் பலவற்றை எடுத்து தனது கலெக்ஷனில் வைத்துள்ளார்.

இதை வைத்து Theyyam of Malabar photo-expedition என்ற கண்காட்சியை கேரளாவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடத்தினார். இந்த கண்காட்சியில் அவருடைய புகைப்படங்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. அவ்வாறு விற்பனையான புகைப்படங்களுள் ஒன்றைதான் காப்பியடித்து கமல்ஹாசன் தனது புதிய படமான உத்தம வில்லன் படத்தின் டீசரில் பயன்படுத்தியுள்ளார்.ஆயிரக்கணக்கான டாலர் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட இந்த புகைப்படத்தை தனது அனுமதியின்றி கமல்ஹாசன் பயன்படுத்தியதற்காக கமல்ஹாசன் மற்றும் உத்தமவில்லன் படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக இந்த புகைப்படத்தை வாங்கிய பிரான்ஸ் நாட்டில் வாழும் மலையாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டநடவடிக்கை எடுக்க தான் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக ஃபேஸ்புக் இணையதளத்தில் செய்திகள் கசிந்து வருகிறது.இந்த செய்தியால் கமல் உள்பட உத்தம வில்லன் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி