செய்திகள்,விளையாட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி… post thumbnail image
டாக்கா:-இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் தவான் 10 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ என அம்பயரால் தவறாக அவுட் கொடுக்கப்பட்டார். பின்னர் வந்த கேப்டன் கோலி 5 ரன்னில் நடையை கட்டினார்.

இரு விக்கெட்டுகள் விழந்த போதும் அதிரடியாக விளையாடிய ரோகித் 58 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரகானே தன் பங்குக்கு 23 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பின்னர் வந்த ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி வந்தனர். ஆட்டத்தின் 38-வது ஓவரில் கார்த்திக்கும் 23 ரன்களில் அவுட்டானார்.6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா பாகிஸ்தான் பந்து வீச்சை வெளுத்துவாங்கினார். அவருக்கு போட்டியாக ராயுடுவும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். ராயுடு 62 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த போது அஜ்மல் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான போதும் ஜடேஜா இரண்டு சிக்சர்களை விளாசி 49 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்துள்ளது.

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியில் சார்ஜில் கான்னும், அகமது சேசாட்டும் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். சார்ஜில் கான் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய ஹபிஸ், சேசாட்டுடன் ஜோடி சேர்ந்தார்.
42 ரன்கள் எடுத்த நிலையில் சேசாட் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் மிஸ்பா 1, உமர் அக்மல் 4, சாயிப் மக்சூட் 38 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹபிஸ் 75 ரன்களில் ஆவுட்டானார். அடுத்த களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.விறுவிறுப்பாக நடந்த கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் பந்தில் அப்ரிடியின் அதிரடியாக விளையாடி 2 சிக்ஸர்களை விளாசி 49.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Score Board

IND Inning

Batsman R B M 4s 6s S/R
Sharma R. c Hafeez M. b Talha M. 56 58 14 7 2 96.55
Dhawan S. lbw Hafeez M. 10 13 1 2 0 76.92
Kohli V. c Akmal U. b Gul U. 5 11 5 0 0 45.45
Rahane A. c Hafeez M. b Talha M. 23 50 14 3 0 46.00
Rayudu A. c Anwar A. b Ajmal S. 58 62 28 4 1 93.55
Karthik D. c Ajmal S. b Hafeez M. 23 46 19 1 0 50.00
Jadeja R. not out 52 49 3 4 2 106.12
Ashwin R. st Akmal U. b Ajmal S. 9 7 0 2 0 128.57
Shami M. c Maqsood S. b Ajmal S. 0 3 0 0 0 0
Mishra A. not out 1 1 0 0 0 100.00
Extras: (w 5, lb 3) 8
Total: (50 overs) 245 (4.9 runs per over)
Bowler O M R W E/R
Hafeez M. 8.6 0 38 2 4.42
Gul U. 8.6 0 60 1 6.98
Khan J. 6.6 0 44 0 6.67
Afridi S. 7.6 0 38 0 5.00
Talha M. 6.6 1 22 2 3.33
Ajmal S. 9.6 0 40 3 4.17

PAK Inning

Batsman R B M 4s 6s S/R
Hafeez M. c Kumar B. b Ashwin R. 75 117 21 3 2 64.10
Gul U. c Rahane A. b Kumar B. 12 12 3 0 1 100.00
Khan J. not out 1 1 0 0 0 100.00
Afridi S. not out 34 18 3 2 3 188.89
Talha M. c Jadeja R. b Kumar B. 0 1 0 0 0 0
Ajmal S. b Ashwin R. 0 1 0 0 0 0
Sharjeel K. b Ashwin R. 25 30 4 3 1 83.33
Shehzad A. c Ashwin R. b Mishra A. 42 44 4 6 0 95.45
Misbah-ul-Haq N. run out Mishra A. 1 4 0 0 0 25.00
Akmal U. c Jadeja R. b Mishra A. 4 17 1 0 0 23.53
Maqsood S. run out Ashwin R. 38 53 20 2 1 71.70
Extras: (w 6, lb 11) 17
Total: (49.4 overs) 249 (5.0 runs per over)
Bowler O M R W E/R
Jadeja R. 9.6 1 61 0 6.35
Ashwin R. 9.4 0 44 3 4.68
Shami M. 9.6 0 49 0 5.10
Mishra A. 9.6 0 28 2 2.92
Kumar B. 9.6 0 56 2 5.83

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி