செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா மரணம்…

பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா மரணம்…

பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா மரணம்… post thumbnail image
பெங்களூர்:-பெங்களூர் ஹொசகெரேஹள்ளியில் வசித்த வந்த சி.ஆர்.சிம்ஹா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிம்ஹா உயிரிழந்துள்ளார். சி.ஆர்.சிம்ஹா தனது 12-ஆவது வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, 150க்கும் மேற்பட்ட கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத்தின் சகோதரர் ஆவார். சிம்ஹாவின் உடலுக்கு கன்னடத் திரைத் துறையினர், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.சிம்ஹாவின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ரவீந்திர கலாஷேத்ராவில் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி