செய்திகள் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்… post thumbnail image
சென்னை:-சத்யராஜ் தயாரிப்பில் அவரது மகன் சிபிராஜ் நடித்து வரும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை‘.இந்த படத்தின் கதை ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஒரு படத்தின் காப்பி என்றும் ஆனால் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தாங்கள் காப்பியடிக்காமல் கதையின் மெயின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்துள்ளோம் என்றும் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

சிபிராஜுக்கு ஜோடியாக அருந்ததி என்னும் புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். நிஸார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் எடிட்டிங் பணியை ப்ரவீண், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சக்தி எஸ்.ராஜன் ஏற்கனவே சிபிராஜ் நடித்த நாணயம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ் தன்னுடைய வீட்டில் ஏற்கனவே மூன்று நாய்களை வளர்ப்பதால் அவரை நாயோடு நடிக்க வைத்ததில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என இயக்குனர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி