செய்திகள்,திரையுலகம் பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…

பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…

பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.

இவனை உருவாக்கியதன் மூலம் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறார் விக்டர். இதனால் கல்லறை மனிதனை அழிக்க பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசுகிறார். ஆனால் கல்லறை மனிதன் அழியாமல், தன்னை அழிக்க நினைத்த விக்டரை பழி வாங்க திட்டம் தீட்டுகிறான். அதன் விளைவாக விக்டரின் மனைவியை கொன்று விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பனி பிரதேசத்திற்கு போய்விடுகிறான்.இதை அறிந்த விக்டர், கல்லறை மனிதனை தேடி பனி பிரதேசத்திற்கு செல்கிறார். அங்கு பனியின் தாக்கத்தால் விக்டர் இறந்து விடுகிறார். தன்னை படைத்தவன் என்ற காரணத்தினால் கல்லறை மனிதன், விக்டரை அடக்கம் செய்கிறான். அப்போது அங்கு வரும் அரக்கர்கள், கல்லறை மனிதனை தாக்குகிறார்கள். அதில் ஒரு அரக்கனை இவன் கொன்று விடுகிறான். இதைப் பார்க்கும் அரக்கர்களின் எதிரியான கார்கோலிஸ் இனத்தை சேர்ந்தவர்கள் கல்லறை மனிதனையும், இவனை உருவாக்கிய குறிப்பு அடங்கிய டைரியையும் காப்பாற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

மனிதனும் அல்லாத, அரக்கனும் அல்லாத, கார்கோலிஸும் அல்லாத கல்லறை மனிதனை கொன்றுவிடுமாறு தன் ராணியிடம் படைத்தளபதி கூறுகிறான். இதற்கு ராணி மறுப்பு தெரிவிக்கிறாள். மேலும் அவனிடம் ஏதோ மனித நேயம் இருக்கிறது. அதனால் இவனை நம்மிடமே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறாள்.இந்நிலையில் கல்லறை மனிதனையும் விக்டரின் டைரியையும் தேடி அரக்கர்கள் அலைகிறார்கள். இறுதியில் கல்லறை மனிதனை அவர்கள் கண்டுபிடித்தார்களா? டைரியை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

கல்லறை மனிதனாக நடித்திருக்கும் ஆருண் ஏகார்ட், கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிக்ஸ் பேக் உடற்கட்டோடு சண்டை காட்சியில் மிரள வைக்கிறார். நாயகி யுவானி ஸ்ட்ராகோவ்ஸ்கி சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். ஜானி கிளிமெக்கின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ரோஸ் எமிரியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. இயக்குனர் ஸ்டூவார்ட் பீட்டி திரைக்கதையில் விறுவிறுப்பை அதிகப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பறக்கும் கல்லறை மனிதன்’ பயப்பட வைக்கும் மனிதன்……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி