செய்திகள்,திரையுலகம் கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?…

கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?…

கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வருமான வரித்துறையினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் செலுத்த வேண்டிய வரியை தவறாமல் கட்டினால்தான் நாட்டின் வளர்ச்சிப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும். பொதுமக்கள் கோவில் உண்டியல்களில் போட்டு பணத்தை வீணாக்குவதை விட அந்த பணத்தை வரியாக கட்டினால், நாட்டின் வளர்ச்சிக்காவது பயன்படும் என்று கூறினார்.

கமல் கொள்கை அளவில் ஒரு நாத்திகர் என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரி கட்டவேண்டும் என அறிவுறுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் இந்துக்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் உண்டியலில் பணம் செலுத்துவதை கமல் கேலி செய்து பேசியுள்ளதை இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கமல் உடனடியாக தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி