செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டில் கலந்து கொள்கிறார் அமிதாப் பச்சன்!…

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டில் கலந்து கொள்கிறார் அமிதாப் பச்சன்!…

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டில் கலந்து கொள்கிறார் அமிதாப் பச்சன்!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் பாடல்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது படக்குழு. ஈராஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மோஷன் கேப்சன் தொழில்நுட்பத்தில் உருவான முதல் இந்திய படமான ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, சோபனா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார். ஒரே நேரத்தில் இரு மாபெரும் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருவது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி