செய்திகள் உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் !! ஃபேஸ்புக் அதிபரின் ஐடியா!…

உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் !! ஃபேஸ்புக் அதிபரின் ஐடியா!…

உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் !! ஃபேஸ்புக் அதிபரின் ஐடியா!… post thumbnail image
பார்சிலோனா:-உலகில் மொபைல் போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் இலவச இண்டர்நெட் சேவை அளித்திடும் மெகா திட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக பேஸ்புக் நிறுவனர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பார்சிலோனாவில் Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசிய ஃபேஸ்புக் CEO Mark Zuckerberg இந்த திட்டத்தை செயல்படுத்த உலகில் பிரபலமாக இயங்கிவரும் ஐந்து வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிக விரைவில் இந்ததிட்டம் செயல்வடிவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகில் தற்போது 7 பில்லியன் பொதுமக்கள் 2ஜி மற்றும் 3ஜி சேவையை மக்கள் மொபைல் மூலம் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஃபேஸ்புக், கூகுள் தேடுபொறி, போன்ற அடிப்பை இணையதளங்கள் அனைத்தும் செயல்படும் வகையில் இலவச இண்டர்நெட் சேவை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவன அதிபரின் இந்த திட்டம் செயல்படுத்த தொடங்கினால் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன் பெறுவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி