செய்திகள்,திரையுலகம் தீபிகா படுகோனே எனக்கு வேண்டாம்!…நடிகரின் அதிரடி முடிவு…

தீபிகா படுகோனே எனக்கு வேண்டாம்!…நடிகரின் அதிரடி முடிவு…

தீபிகா படுகோனே எனக்கு வேண்டாம்!…நடிகரின் அதிரடி முடிவு… post thumbnail image
மும்பை:-அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே.அவர் தற்போது ஷாருக்கானுடன் சேர்ந்து ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை நாயகியாக்க வேண்டாம் என்று ஒரு ஹீரோ கூறியுள்ளார்.

சூரஞ் பர்ஜாத்யாவின் படத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.சல்மானுக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து ஹீரோவிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர்.தீபிகா மிகவும் பிசியான நாயகி. என் படத்திற்கு பிசியாக இருக்கும் நடிகை வேண்டாம் என்று சல்மான் தெரிவித்துவிட்டாராம். முன்னதாக நாயகி தேர்வில் தான் தலையிடுவது இல்லை என்று சல்மான் கூறியிருந்தார்.

சில காலமாக சல்மான் தனது படங்களில் புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார். அப்படி சல்மான் கானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான் சினேகா உல்லல், ஜரீன் கான், சோனாக்ஷி சின்ஹா, டெய்சி ஷா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திலும் புதுமுக நடிகையை ஹீரோயினாக்குமாறு கூறுவாரோ சல்மான்? பொறுத்திருந்து பார்ப்போம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி