துப்பாக்கி இந்தி ரீமேக்கில் நடிக்க பாக்சிங் கற்ற நடிகை!…

விளம்பரங்கள்

மும்பை:-பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. தபாங் என்ற ஒரு படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றவர். அக்ஷய் குமாரின் ஆஸ்தான நாயகி. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தமிழ் துப்பாக்கியின் ரீமேக்கான ஹாலிடேவில் காஜல் அகர்வால் கேரக்டரில் நடிக்கிறார் சோனாக்ஷி.

தமிழ் துப்பாக்கி படத்தை பார்த்த சோனாக்ஷி, “காஜல் குத்துச்சண்டை போடுவது போல நன்றாக நடித்திருக்கிறார். நான் நிஜமாகவே போடுகிறேன்” என்று கமெண்ட் அடித்ததுடன் இரண்டு மாதங்கள் தீவிர உடற்பயற்சி, குத்துச் சண்டை பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்.இந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது உடன் நடித்த மூன்று பெண்கள் காயமடைந்தும், மயக்கமடைந்த செய்தியும் இப்போது வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சோனாக்ஷி கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையே எனக்கு கிடையாது. காரணம் நான் ரொம்ப குண்டாயிருப்பேன்.

அப்பாவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வரும் அக்ஷய்குமார்தான் நீ ரொம்ப அழகா இருக்க உடம்பை மட்டும் சிலிம்மாக்கிட்டீன்னா பெரிய ஸ்டாரா வருவேன்னு ஆசையை தூண்டினார். அதன்பிறகு ஜிம்மே கதியாக கிடந்து இளைத்தேன். ஜிம் எனக்கு பழகிப்போனதால் என் கேரக்டருக்கு நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி என்னை தயார் செய்து விடுவேன். ஹாலிடே படத்தில் ஹீரோயின் பாக்சிங் வீராங்கணை என்றார்கள். உடனே பாக்சிங்கின் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டு நடித்தேன் என்கிறார் சோனாக்ஷி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: