செய்திகள்,திரையுலகம் நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!…

நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!…

நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!… post thumbnail image
சென்னை:-யாரடி நீ மோகினி, கற்றது களவு, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருப்பவர் முமைத்கான். கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ஷகிரா. அவரைப்போல் நானும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபத்தில் அழகிபோட்டி ஒன்றில் மேடையில் தோன்றி சொந்த குரலில் பாப் பாடல் பாடினேன். அதில் எனது டான்ஸ் மூவ்மென்ட்டையும் போட்டேன். அது பாராட்டை தந்தது. சினிமாவில் மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் மேடையில் நான் பாடி ஆடியதை கண்டதும் பரவசம் அடைந்து வரவேற்றனர். உடனே இன்னொரு பாடலை பாட வேண்டும் என்றனர். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும். கொலம்பியா நாட்டை சேர்ந்த பாப் பாடகி ஷகிராபோல் மேடையில் ஆடிப்பாட வேண்டும் என்பதுதான் ஆசை. பாப் பாடல் பாடியதற்காக கிடைத்த அப்ளாஸ் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு நாள் என் ஆசை நிறைவேறும். எனது ஆசையை எனது நண்பரிடம் தெரிவித்தேன்.

முதலில் அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு நானே சொந்த குரலில் பாடி காட்டியபோது எனது ஆர்வம் புரிந்தது. பிறகு பாடுவதற்கான டிப்ஸ் கொடுத்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட குத்து பாடல்களுக்கு சினிமாவில் நடனம் ஆடி இருக்கிறேன். இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எண்ணுகிறேன் என்றார். முமைத்கானுக்கு நடிப்பு சான்ஸ் குறைந்துவிட்டது. இதனால்தான் அவர் பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சில இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி