செய்திகள்,திரையுலகம் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘குண்டே’ படம் 100 கோடி வசூல்!…

நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘குண்டே’ படம் 100 கோடி வசூல்!…

நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘குண்டே’ படம் 100 கோடி வசூல்!… post thumbnail image
மும்பை:-கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸான பாலிவுட் படமான குண்டே ,100 கோடி ரூபாய் வசூல் படங்களில் தன்னை இணைத்துக்கொண்டது. இந்தியாவில் ரிலீசான முதல் வாரத்தில் 63.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இந்த படம், இதுவரை 82 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது.

இதுபோக வெளிநாட்டு வசூல் இதுவரை 18 கோடி ரூபாய் வந்துள்ளதால், ரூ.100 கோடி வசூல் படங்களில் குண்டே இணைந்துள்ளது.அர்ஜூன்கபூர், ரன்வீர் சிங், மற்றும் ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். சோஹாலி சென் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.கொல்கத்தா நகருக்கு வந்த இரண்டு இளைஞர்கள் அகதிகளாக தங்கள் வாழ்க்கையை துவக்கி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி