செய்திகள்,திரையுலகம் சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…

சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…

சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!… post thumbnail image
சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்காக விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

கிரிக்கெட்டில் கோலோச்சிய வெங்கடேஷ் பிரசாத் தற்போது சினிமாவிலும் கால்பதிக்க வந்துள்ளார். தெலுங்கில் உருவாகிவரும் கிரிக்கெட் பற்றிய புதிய படத்தில் நடிக்கிறாராம். ‘சச்சின் டெண்டுல்கர் கது’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிக்கிறாராம்.

டெண்டுல்கரின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் பெரிய கிரிக்கெட் வீரராக ஆவதுதான் படத்தின் கதை. அந்த சிறுவனின் தாயாக சுகாசினி நடிக்கிறாராம். இப்படத்தை எஸ்.மோகன் என்பவர் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி