செய்திகள்,திரையுலகம் ‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்கும் அஜீத் – விஜய்!…

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்கும் அஜீத் – விஜய்!…

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்கும் அஜீத் – விஜய்!… post thumbnail image
சென்னை:-அக்னி நட்சத்திரம் படத்தை இப்போது யாரை வைத்து ரீமேக் செய்யலாம் என்று 13 வயது சின்னப் பையன் தனது ஆசையைச் சொல்லியுள்ளான். இந்தப் படத்தை மட்டும் இப்போது இவர்களை வைத்து ரீமேக்கினால் படம் செம ஹிட்டு என்று கியாரண்டியும் தருகிறான்.அவன் சொல்லச் சொல்ல நமக்கே கியூரியாசிட்டி கூடத்தான் செய்தது.

பிரபு கேரக்டருக்கு அஜீத் சூப்பர் பொருத்தமாக இருப்பாராம். அதேபோல கார்த்திக் கேரக்டருக்கு விஜய்தான் சரியான மேட்ச்சாம். ஏன் அஜீத் என்று கேட்டால் பிரபு மாதிரியே இவரும் கொஞ்சம் குண்டா இருக்காரு, அமைதியாப் பேசுறாரு. கார்த்திக் மாதிரியே விஜய் துறுதுறுன்னு இருக்காராம்
விஜயக்குமார் கேரக்டருக்கு அவரையே போடலாம் என்பது இந்தப் பையன் கூறும் ஆலோசனை. ஒரு வேளை அவர் சரிப்பட்டு வராவிட்டால் சரத்குமாரைப் போடலாமாம். அதுவும் சரிவராவிட்டால் இருக்கவே இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ்.அமலா கேரக்டருக்கு அமலா பால் சரியான சாய்ஸாக இருக்குமாம். ஏன் அப்படி என்று கேட்டால்.. பெயரிலேயே பொருத்தம் இருக்கிறதே.. பிறகெதுக்கு புதுசாக தேடிக் கொண்டு என்று பட்டென்று பதில் வருகிறது.

நிரோஷா நடித்த கேரக்டருக்கு ஹன்சிகாதான் செம பொருத்தமாக இருப்பாராம். ஏன் அனுஷ்கா நல்லாருக்காதா என்று கேட்டால், விஜய்க்கு பொருத்தமான ஜோடி ஹன்சிகாதான் என்று பதில் வந்தது. ஏன் திரிஷா சரியா வராதா என்று நாம் அப்பாவித்தனமாக கேட்டால், ஹன்சிகாதான் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட் என்று படாரென்று பதில் வருகிறது.படத்திற்கு இசை கண்டிப்பாக யுவன் ஷங்கர் ராஜாதான் போட வேண்டுமாம். அவர்தான் ராஜா ராஜாதி ராஜன் பாட்டை இந்தக் காலத்து இளசுகளுக்கேற்ற வகையில் சரியாக ரீமேக் செய்யவாராம்.

டைரக்டராக மணிரத்தினமே இருக்கலாமாம். ஒரு வேளை அவருக்கு சரிப்பட்டு வராவிட்டால், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவை விட்டு இயக்க வைக்கலாமாம். அவர்தான் அண்ணன், தம்பி கதையை சரியாக இயக்குகிறாராம்.ஒரு கேரக்டருக்கு சரண்யா பொன்வண்ணன் ஓ.கேவாம். இன்னொரு கேரக்டருக்கு ராதிகா அல்லது ரோஜாவாம்.அக்னி நட்சத்திரம் என்று வந்து விட்டால் ஜனகராஜை மறக்க முடியுமா என்ன.. அந்த கேரக்டருக்கு பரோட்டா சூரிதான் சூப்பராக செட் ஆகுமாம். காரணம், ஜனகராஜ் போல கலகலப்பான குரல், காமெடிக்கு இவர்தான் பொருத்தமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி