அஜித்துடன் நடிக்க சம்பளமே வேண்டாம் என அறிவித்த நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-தல அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பிற்காக பிரபல ஹீரோக்கள் மட்டுமின்றி ஹீரோயின்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒரு சில ஹீரோக்களுக்கு அஜித்தே முன்வந்து தனது படத்தில் நடிப்பதற்கு அனுமதி பெற்றுத் தருவதும் நடந்துவருகிறது.ஆனால் ஹீரோயின்கள் விஷயத்தில் அஜித் தலையிடுவதில்லை என்றும் அது இயக்குனரும் தயாரிப்பாளரும் சேர்ந்து எடுக்கும் முடிவென்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறை நடிகைகளான ரம்யா நம்பீசன் மற்றும் நஸ்ரியா ஆகியோர் ஏற்கெனவே அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.அஜித் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் தனக்குச் சம்பளமே வேண்டாமென்று ரம்யா நம்பீசனும், அஜித் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் அவரது தங்கையாகவோ, மகளாகவோ நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தாலும் போதுமென்று கூறியிருக்கிறார் நஸ்ரியா.
இந்தவரிசையில் அழகுப் பதுமையென வர்ணிக்கப்படும் சமந்தாவும் இணைந்துள்ளார்.அவரும் தான் அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும், அதே சமயம் விரைவில் அந்த வாய்ப்புக் கிடைக்குமென்றும் கூறியுள்ளார்.வீரம் படத்திற்குப் பிறகு அஜித் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கவுள்ளன.

இப்படத்தில் அஜித்திற்குச் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதனை உறுதி செய்யாத நிலையில், கௌதம் வாசுதேவ் மேனனின் ஃபேவரிட் ஹீரோயினான சமந்தாவும் அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அஜித்தின் ஜோடியாக சமந்தா நடிப்பாரா என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: