செய்திகள்,திரையுலகம் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!…

சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!…

சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘பிரம்மன்‘ படத்தை அடுத்து பாலா இயக்க இருக்கும் படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். கரகாட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது.

இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு ஆக்ஷன் கட் சொல்ல சசி தயாராகப் போகிறார்.விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்து சிம்புதேவன், அட்லீ படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகு சசிகுமார் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். 2015ல் விஜய்யை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்க இருக்கிறார் சசிகுமார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி