இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆண்டிபிளவர்?…

விளம்பரங்கள்

மும்பை:-நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் கேப்டன் டோனி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.இதையொட்டி காயத்தை காரணமாக காட்டி டோனி ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அந்தப் போட்டிக்கு வீராட் கோலி கேப்டனாக பணிபுரிகிறார்.

இதற்கிடையே பயிற்சியாளர் பிளட்சரை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணி முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியதாவது:–

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்குமாறு ஆண்டி பிளவரை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான தகவல் தவறானது. இதில் எந்த உண்மையும் இல்லை. இது தொடர்பாக எந்தவித விவாதமும் நடைபெறவில்லை.அடுத்த மாதம் தான் பயிற்சியாளர் தேர்வு நடைபெறுகிறது. இதுவரை யாரை நியமிக்குவது என்று இதுவரை முடிவு செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 12 டெஸ்டில் 10 டெஸ்டில் தோற்றது. 2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் (0–4) ஆகி இருந்தது.வெளிநாட்டில் தொடர் தோல்வியால் பிளட்சரின் ஒப்பந்ததை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. அடுத்த மாதத்துடன் அவரது ஒப்பந்தம் முடிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: