செய்திகள்,திரையுலகம் கொடிய நோயில் சிக்கிய விஷால்!…

கொடிய நோயில் சிக்கிய விஷால்!…

கொடிய நோயில் சிக்கிய விஷால்!… post thumbnail image
சென்னை:-Narcolepsy என்பது ஒரு கொடிய நோய். இந்த நோய் வந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென தூங்கிவிடுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகச்சிலரே இந்த உலகத்தில் இருக்கின்றனர். லட்சம் பேர்களில் ஒருவருக்கே இந்த நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்படும் கேரக்டரில் நடித்திருக்கிறார் நடிகர் விஷால்.

விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில்தான் இந்த கேரக்டரில் நடிக்கிறார் விஷால். கொடிய வகை தூக்க நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷால், வில்லன்களால் துரத்தப்படுவதும் அதில் இருந்து அவர் தப்பிப்பதும்தான் கதை. இந்த படம். லிசா மெக்மேன் அவர்கள் எழுதிய வேக் (wake) என்ற நாவலை தழுவியது. மிலே சைரஸ் நடித்த “வேக்”படம் ஹாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தை தழுவிதான் ‘நான் சிகப்பு மனிதன்’ எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இயக்குனர் திரு இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த திரைபடத்தின் கதை, மற்றும் திரைக்கதையை தான் சொந்தமாக கற்பனை செய்து எழுதியதாகவும் எதைப் பார்த்து தழுவி எழுதப்பட்டது அல்ல என்றும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி