செய்திகள்,திரையுலகம் விஸ்வரூபம் 2 படத்தில் கமல் இதுவரை செய்யாத புதுமை!…

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் இதுவரை செய்யாத புதுமை!…

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் இதுவரை செய்யாத புதுமை!… post thumbnail image
சென்னை:-உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பத்து வருடங்களில் இல்லாத ஒரு பழக்கத்தை விஸ்வரூபம் 2 படத்தில் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் கமல் நடிக்கும் படங்கள் அனைத்திலும் அவர் ஒரு பாடலையாவது பாடியிருப்பார்.

அவர் சமீபத்தில் பாடாத ஒரே படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில்கூட ஹாரீஸ் ஜெயராஜின் இசைக்கு கமல் ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் இசைக்கும் குரலுக்கு ஒத்துவரவில்லை என்று கூறி, கமல்ஹாசனே வேறு ஒரு பாடகரை வைத்து மீண்டும் அந்த பாடலை பாடவைத்துவிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே.இதேபோல ஒரு நிலைமை தற்போதைய விஸ்வரூபம் 2 படத்துக்கும் வந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்காக அனைத்து பாடலையும் ஹிந்துஸ்தானி சாயலில் மெட்டு அமைத்துள்ளார்.

கமல்ஹாசனின் குரல் கர்நாடக சங்கீத சாயலுக்கு மட்டுமே ஒத்துவரும். ஹிந்துஸ்தானி சாயலில் கமல் குரல் சரியாக செட் ஆகவில்லை. எனவே இந்த படத்திலும் கமல் ஒரு பாடலையும் பாடவில்லை என்று கூறப்படுகிறது. விஸ்வரூபம் முதல் பாகத்தில் கமல் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவர இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி