செய்திகள்,திரையுலகம் அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…

அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…

அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரண்டு வரலாற்று பின்னணி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். இந்த படங்களில் அனுஷ்காவை மையமாக வைத்தே கதை நகர்கிறது.

மிகவும் மரியாதைக்குரிய, வீரமான பெண்மணியாக நடித்து வரும் இந்த நேரத்தில் அஜீத்துடன் டூயட் பாடுவது போன்ற ஒரு கிளாமர் ரோலில் நடித்தால் அனுஷ்கா கேரக்டரின் இமேஜ் பாதிக்கப்படும் என இரண்டு படங்களின் இயக்குனர்கள் அறிவுறுத்தியதால் கெளதம் மேனனிடம் அனுஷ்கா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அனுஷ்காவின் இந்த திடீர் முடிவால் கெளதம் மேனன் வேறு ஹீரோயினியை தேடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் ஆலோசனை செய்ததில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கெளதம் மேனன் முடிவு செய்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகிய இருவரில் ஒருவர் அஜீத்துடன் ஜோடி சேருவார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி