செய்திகள்,திரையுலகம் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!… post thumbnail image
சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது.

படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும் கமலுக்கு ஜோடியாகப் போகும் நடிகைகள் லிஸ்ட் மட்டும் இன்னும் பெண்ட்டிங்கில் நிற்கிறது.
காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா என்று மூன்று ஹீரோயின்களின் பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் யாரும் இன்னும் கால்ஷீட் தேதிகளை தருவதாக சம்மதம் சொல்லவில்லையாம்.

இதே நிலைமை தான் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் மீனாவின் கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் இல்லை. காரணம் எந்த ஹீரோயினும் கமலுக்கு கிடைக்கவில்லை.‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ஒரு பெண்ணுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்பதால் பல முன்னணி ஹீரோயின்கள் இந்தப் படத்திலும் நடிக்கத் தயங்குகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி