ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2ம் இடம்!…

விளம்பரங்கள்

துபாய்:-நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசையில் தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 117 ஆக இருந்தது. தொடரை பறிகொடுத்ததால் 5 புள்ளிகளை இழந்துள்ளது.

ஆனாலும் 3–வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட (110 புள்ளி) மயிரிழையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகின் நம்பர் ஒன் அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆனால் தொடர் முடிந்த பிறகே தரவரிசை கணக்கிடப்படும் என்பதால் ஆஸ்திரேலியா இன்னும் பின்தங்கியே உள்ளது.தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா குறைந்தது சமன் செய்தாலே இந்திய அணியை ஓரங்கட்டிவிட்டு 2–வது இடத்திற்கு முன்னேறி விடலாம். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலிய அணி 1–0 என்ற கணக்கில் வென்றால் 115 புள்ளிகளாகவும், 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் 116 புள்ளிகளாகவும், 3–0 என்ற கணக்கில் தனதாக்கினால் 117 புள்ளிகளாகவும் உயரும்.

மாறாக இந்த முடிவுகள் தென்ஆப்பிரிக்காவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 3 டெஸ்டிலும் தோற்றாலும் கூட தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். மாறாக எஞ்சிய இரு டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால் அந்த அணி முந்தைய 133 புள்ளிகளை தக்கவைத்துக் கொள்ளும். இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் தொடரும். ஏப்ரல் 1–ந்தேதி நிலவரப்படி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். இதை தென்ஆப்பிரிக்கா ஏற்கனவே உறுதி செய்து விட்டது.அந்த அணிக்கு ‘நம்பர் ஒன்’ கதாயுதத்துடன் ரூ.2 கோடியே 79 லட்சம் பரிசுத்தொகையாக கிடைக்கும். 2–வது மற்றும் 3–வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.2.17 கோடி, ரூ.1½ கோடி வீதம் வழங்கப்படும்.

ஐ.சி.சி. தரவரிசை வருமாறு:–

1. தென்ஆப்பிரிக்கா-133 புள்ளி

2. இந்தியா-112 புள்ளி

3. ஆஸ்திரேலியா-111 புள்ளி

4.இங்கிலாந்து-107 புள்ளி

5. பாகிஸ்தான்-100 புள்ளி

6. இலங்கை-89 புள்ளி

7. நியூசிலாந்து-87 புள்ளி

8. வெஸ்ட் இண்டீஸ்-87 புள்ளி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: