செய்திகள்,திரையுலகம் விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்… post thumbnail image
சென்னை:-உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்‘திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக யாரை வைத்து படமெடுக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான்.

அதன் பின்னர் சூர்யா மூன்றாவதாக அஜீத் என்று கூறியுள்ளார். இவர்கள் மூவரை தவிர தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர்களின் படங்களையும் தயாரிக்க ஆசை என்றும் அவர் மேலும் கூறினார்.
உதயநிதி விஜய் நடித்த குருவி படத்தின் மூலமாகத்தான் முதன்முதலாக தயாரிப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன்பின்னர் சூர்யா நடித்த ஆதவன், மற்றும் ஏழாம் அறிவு படத்தை தயாரித்தார். அஜித்தை வைத்து அவர் இன்னும் படம் தயாரிக்கவில்லை.

தனுஷ் மற்றும் சிம்பு படங்களை உதயநிதி தயாரிக்கவில்லை எனினும் சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்தார். எதிர்காலத்தில் அஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் இருப்பதாக கூறிய உதயநிதி அதற்குரிய நேரம் வரும்போது தல’யுடன் சேர்ந்து படம் தயாரிப்பேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி