அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு… post thumbnail image
புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி