கமல்ஹாசனின் மருதநாயகத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் ?…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் Fox Star Studios இணைந்து தயாரித்த ‘குக்கூ‘ படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கேயார் பேசும்போது Fox Star Studios போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் முதலீடு செய்வது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமா மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமின்றி உலக அளவில் வியாபாரம் ஆகக்கூடியது.கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் போன்ற படத்தை Fox Star Studios நிறுவனம் நினைத்தால் கண்டிப்பாக திரைக்கு கொண்டுவரலாம். அதற்கு அந்த நிறுவனமும், கமல்ஹாசனும் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். கேயார் சொன்ன யோசனையை தாம் பரிசீலிப்பதாக Fox Star Studios நிர்வாக இயக்குனர் கூறியதாகவும் தெரிகிறது.

எனவே மருதநாயகம் குறித்த முறையான அறிவிப்பை கமல்ஹாசன் ரசிகர்கள் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் பூஜை போடப்பட்டது. ஒருசில காட்சிகளும், எடுக்கப்பட்டு டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் இமாலய பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கண்டிப்பாக கமல் மனது வைத்தால் மருதநாயகம் வெளிவரும் என விழாவுக்கு வந்த அனைவரும் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: