செய்திகள்,விளையாட்டு 2-வது டெஸ்ட்:மெக்கல்லம் இரட்டை சதம் டீம் ஸ்கோர் (571/6)…

2-வது டெஸ்ட்:மெக்கல்லம் இரட்டை சதம் டீம் ஸ்கோர் (571/6)…

2-வது டெஸ்ட்:மெக்கல்லம் இரட்டை சதம் டீம் ஸ்கோர் (571/6)… post thumbnail image
வெலிங்டன்:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது.246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது.

மெக்கல்லம் 114 ரன்னும், வாட்லிங் 52 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.நேற்று போலவே இன்றும் அவர்களது ஆட்டம் தொடர்ந்து சிறப்பாக இருந்தது. இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினார்கள். மதிய உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன் எடுத்து இருந்தது.மதிய உணவு இடை வேளைக்கு பிறகு விக்கெட் கீப்பர் வாட்லிங் சதம் அடித்தார். அவர் 297 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 100 ரன்னை எடுத்தார். 21–வது டெஸ்டில் விளையாடும் வாட்லிங்குக்கு இது 3–வது செஞ்சூரி ஆகும்.அதை தொடர்ந்து மெக்கல்லம் அபாரமாக விளையாடி ‘இரட்டை சதம்’ அடித்தார். 395 பந்துகளில் அவர் 200 ரன்னை எடுத்தார். இதில் 24 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.முதல் டெஸ்டிலும் அவர் இரட்டை சதம் (224 ரன்) அடித்து இருந்தார். 144–வது ஓவரில் நியூசிலாந்து அணி 400 ரன்னை தொட்டது.
தேனீர் இடைவேளையின் போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 440 ரன் குவித்து இருந்தது. மெக்கல்லம் 228 ரன்னிலும், வாட்லிங் 119 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கடும் போராட்டத்துக்கு பிறகு முகமது ஷமி இந்த ஜோடியை ஒரு வழியாக பிரித்தார். புதிய பந்து எடுக்கப்பட்டதற்கு பலன் கிடைத்தது.வாட்லிங் 124 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 446 ஆக இருந்தது. 6–வது விக்கெட் ஜோடி 352 ரன் எடுத்தது.அடுத்து ஜிம்மி நீசம் களம் வந்தார். மேக்குல்லம் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 571 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 281 ரன்னுடனும், ஜிம்மி நீசம் 67 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

NZ – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Fulton P. lbw Sharma I. 13 31 7 0 0 41.94
Rutherford H. c Vijay M. b Sharma I. 12 34 13 2 0 35.29
Williamson K. c Sharma R. b Shami M. 47 100 14 6 0 47.00
Latham T. c Dhoni M. b Sharma I. 0 8 14 0 0 0
McCullum B. c Jadeja R. b Shami M. 8 19 40 1 0 42.11
Anderson C. c Kohli V. b Sharma I. 24 43 4 3 1 55.81
Watling B. c Sharma R. b Sharma I. 0 4 29 0 0 0
Neesham J. c Dhoni M. b Shami M. 33 35 9 7 0 94.29
Southee T. c Vijay M. b Sharma I. 32 32 2 1 3 100.00
Wagner N. not out 5 12 0 0 0 41.67
Boult T. c & b Shami M. 2 5 0 0 0 40.00
Extras: (w 8, nb 6, lb 2) 16
Total: (52.5 overs) 192 (3.6 runs per over)
Bowler O M R W E/R
Khan Z. 17 3 57 0 3.35
Shami M. 16.5 4 70 4 4.24
Sharma I. 17 3 51 6 3.00
Jadeja R. 2 1 12 0 6.00

IND – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Khan Z. c Watling B. b Wagner N. 22 19 0 4 0 115.79
Shami M. not out 0 1 0 0 0 0
Sharma I. c Watling B. b Boult T. 26 50 2 3 0 52.00
Jadeja R. c Fulton P. b Wagner N. 26 16 1 6 0 162.50
Dhawan S. c Watling B. b Southee T. 98 127 18 14 1 77.17
Vijay M. c Watling B. b Southee T. 2 6 4 0 0 33.33
Pujara C. lbw Boult T. 19 59 12 2 0 32.20
Kohli V. c Rutherford H. b Wagner N. 38 93 1 4 0 40.86
Sharma R. b Neesham J. 0 3 0 0 0 0
Rahane A. c Boult T. b Southee T. 118 158 3 17 1 74.68
Dhoni M. c Watling B. b Boult T. 68 86 1 9 1 79.07
Extras: (w 6, b 8, nb 2, lb 4) 20
Total: (102.4 overs) 438 (4.3 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 16 2 66 0 4.13
Neesham J. 18 2 62 1 3.44
Southee T. 20 0 93 3 4.65
Wagner N. 22.4 3 106 3 4.73
Boult T. 26 7 99 3 3.81

NZ – 2nd Inning

Batsman R B M 4s 6s S/R
Fulton P. b Khan Z. 1 6 0 0 0 16.67
Rutherford H. c Dhoni M. b Khan Z. 35 55 0 6 0 63.64
Williamson K. c Dhoni M. b Khan Z. 7 22 0 0 0 31.82
Latham T. c Dhoni M. b Shami M. 29 64 0 3 0 45.31
McCullum B. not out 281 525 0 28 4 53.52
Anderson C. c & b Jadeja R. 2 6 0 0 0 33.33
Watling B. lbw Shami M. 124 367 0 13 0 33.79
Neesham J. not out 67 96 0 9 0 69.79
Boult T.
Southee T.
Wagner N.
Extras: (w 2, b 5, nb 7, lb 11) 25
Total: (189 overs) 571 (3.0 runs per over)
Bowler O M R W E/R
Sharma I. 38.6 4 124 0 3.21
Khan Z. 42.6 12 129 3 3.03
Shami M. 39.6 5 136 2 3.43
Jadeja R. 48.6 10 108 1 2.22
Sharma R. 10.6 0 40 0 3.77
Kohli V. 5.6 1 13 0 2.32
Dhoni M. 0.6 0 5 0 8.33

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி