செய்திகள் ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…

ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…

ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானின் ஓக்கயாமா பகுதியில் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான சைடைஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ’ஹடாகா மட்ஸுரி’ என்னும் நிர்வாண திருவிழா ஜப்பான் முழுவதும் மிகவும் பிரசித்தியான திருவிழாவாகும்.

இந்த நிர்வாண திருவிழாவில் பங்கேற்பவர்கள் சிறிய வெண்ணிற கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு முதலில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்ந்த நீரூற்றில் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடலும், உள்ளமும் புனிதம் அடையும் என்பது காலகாலமாக பின்பற்றப்படும் ஐதீகம் என்று கூறப்படுகிறது.குளித்து முடித்த பின்னர் பக்தர்கள் அனைவரும் கிணறு போன்ற ஒரு கூடத்தில் ஒன்று திரண்டு நிற்க வேண்டும். அந்த கூடத்துக்கு மேற்புறம் உள்ள ஜன்னல் மாடத்தில் இருந்து ஒரு சாமியார் அதிர்ஷ்ட குச்சிகளை அள்ளி பக்தர்களை நோக்கி தூக்கி வீசுவார்.யார் அந்த குச்சிகளை பிடிக்கிறார்களோ..? அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன், எவ்வித துன்பமும் நெருங்காமல் இருப்பார்கள் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்று சாமியார் வீசும் அதிர்ஷ்ட குச்சிகளை பிடிக்க 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டனர்.அத்தனை பேரும் ஒரே கூடத்தில் நிற்க வேண்டியிருந்ததால் ஒருவர் மீது மற்றவர் இடித்துக் கொண்டும், மூச்சுத் திணறியபடியும் நின்றிருந்தாலும் அதிர்ஷ்ட குச்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இந்த அசவுகரியம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.மாடத்தில் இருந்து சாமியார் குச்சிகளை வீசத் தொடங்கியதும் சோற்றுப் பருக்கைக்கு பாயும் காக்கை கூட்டம் போல் அவர்கள் அனைவரும் கரங்களை விரித்தபடி குச்சிகளை பிடிக்க ஒருவர் மீது இன்னொருவர் முட்டி, மோதி போட்டி போட்டனர்.ஐதீகங்களில் கூறி வருவதற்கு ஏற்ப, சிலரது விரிந்த கரங்களில் தான் அதிர்ஷ்ட குச்சிகள் பிடிபட்டன. குச்சி கிடைக்காத மற்றவர்கள் துரதிர்ஷ்டத்தை நொந்தபடி, வெறுங்கையுடன் வீடு திரும்பினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி