அரசியல்,செய்திகள் இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் நடத்திவருகிறார்: அத்வானியின் குற்றச்சாட்டு…

இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் நடத்திவருகிறார்: அத்வானியின் குற்றச்சாட்டு…

இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் நடத்திவருகிறார்: அத்வானியின் குற்றச்சாட்டு… post thumbnail image
புது டெல்லி:-பாரதீய ஜனதா கட்சி தலைவரான அத்வானி பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்த அரசை தலைமையேற்று நடத்தியவர் என்ற வரலாறு அவருக்கு சொந்தமாகும் என அத்வானி தனது வலைதளத்தில் கூறியுள்ளார்.

கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்று ஆட்சியை தொடங்கிய அவர், ஆட்சி முடியும் தருவாயில் சுதந்திர இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசுக்கு சொந்தமானவர் என்று வரலாறு கூறும் அளவுக்கு தாழ்ந்துவிட்டார் என அத்வானி குறிப்பிட்டுள்ளார். அதே போல் கடந்த 13ந் தேதி தெலுங்கானா குறித்து மோதல் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.13ந் தேதியன்று அவையில் பிரதமரும், சோனியாவும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்து அரை டஜன் மந்திரிகள் அமளி நடைபெற்றுக் கொண்டிருந்த அவையின் மையப்பகுதிக்கு சென்றதை அவர் சுட்டிக்காட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ஒருவர் தெளித்த மிளகு ஸ்பிரேயால் எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் கண்களில் கண்ணீரையும், பல்வேறு உறுப்பினர்களுக்கு இருமலையும் தோற்றுவித்ததையும் கண்டித்துள்ளார்.காமென்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என்ற மிகப்பெரிய ஊழல்களை செய்த அரசாக விளங்கி மன்மோகன் அரசு ஊழலில் சாதனை படைத்துள்ளதாக அத்வானி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி