சிம்புவின் ‘வாலு’ படத்தில் நடிக்கும் விஜய்-அஜீத்!…

விளம்பரங்கள்

சென்னை:-நீண்ட காலமாக கிடப்பில் இருந்த் ‘வாலு‘ படத்தை தூசி தட்டி சிம்பு தற்போது மும்முரமாக படத்தை முடிக்கும் மூடுக்கு வந்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீடு பிப்ரவரி 14அன்று வெளியாகும் என்று கூறினார். ஆனால் ஒரே ஒரு பாடலை வெளியிட்டுள்ளார் சிம்பு. இந்த படத்தை சிம்புவின் நண்பர் விஜய்சந்தர் இயக்கிவருகிறார்.

இந்த படத்திற்கான ஒரு காட்சி சென்னை தி.நகரில் உள்ள Accord என்ற ஓட்டலில் படமாக்கப்பட்டது. சிம்புவும் சந்தானமும் பைக்கில் வருவது போன்றும், சிம்பு அஜீத்தின் முகமூடியையும், சந்தானம் விஜய்யின் முகமூடியையும் அணிந்து வந்தனர். அஜித்தும் விஜய்யும் ஒரே பைக்கில் வருவதை பார்த்து அந்த ஒட்டலில் இருந்தவர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் அதன்பின்னர் அவர்கள் முகமூடியை கழட்டி அவர்களை கேலி செய்வது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த ஐடியாவை இயக்குனரிடம் சிம்புதான் கூறினாராம். இந்த காட்சிக்கு திரையரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என சிம்பு கூறினார். விஜய்யும் அஜீத்தும் இனிமேல் திரையில் சேர்ந்து நடிப்பது என்பது முடியாத காரியம் என்றும் நாமே இதுபோல் ஏதாவது காட்சிகள் எடுத்து அவர்களை இணைத்துவைத்தால்தான் உண்டு என்று நகைச்சுவையுடன் சிம்பு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: