செய்திகள்,திரையுலகம் மிஸ்டர்.கோ 3D திரை விமர்சனம்…

மிஸ்டர்.கோ 3D திரை விமர்சனம்…

மிஸ்டர்.கோ 3D திரை விமர்சனம்… post thumbnail image
சர்க்கஸ் தொழில் செய்யும் 15 வயதான வெய்யின் தாத்தா, அவருக்கு லிங்க் என்னும் பெயருள்ள ஒரு கொரில்லா குரங்கினை விட்டுவிட்டு செல்கிறார். பேஸ்பால் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய லிங்க் குரங்கிற்கு பேஸ்பால் விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிறார். எனவே அக்குரங்கு பேஸ் பால் விளையாட்டில் தூள் கிளப்புகிறது.

சர்க்கஸ் கம்பெனியின் அதிகப்படியான கடன் சுமை காரணமாக பேஸ் பால் விளையாட்டின் ஏஜெண்ட் சங்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கொரியன் பேஸ் பால் லீக்கில் லிங்க் விளையாட வெய் சம்மதிக்கிறார். தனது அசாத்திய திறமையால் அப்போட்டியில் டூஸான் அணிக்காக களமிறங்கும் லிங்க் சிறப்பாக விளையாடி ஏராளமான ரசிகர்களை பெறுகிறது. மேலும் ரசிகர்களால் மிஸ்டர் கோ என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.

வெற்றிக்களிப்பில் வெய்யும், சங்கும் மிஸ்டர் கோவிற்கு கால் முட்டியில் ஏற்பட்ட அடியை கவனிக்காமல் ஜப்பானில் நடைபெறும் போட்டிற்கு அதை அழைத்து செல்கின்றனர். ஆனால் வலியின் காரணமாக மிஸ்டர் கோ மட்டையை சுழற்ற முடியாமல் கீழே விழுகிறது. இதனால், வெய்யும், சங்கும் அதிர்ச்சியடைகின்றனர்.

இந்நிலையில், மிஸ்டர் கோ போலவே பேஸ் பால் விளையாட்டில் பந்தை எறியும் பயிற்சியில் கைதேர்ந்த மற்றொரு கொரில்லாவை எதிர் அணி வாங்கி அதை அந்த போட்டியில் ஈடுபட வைக்கின்றனர்.

இறுதியில், மிஸ்டர் கோ உடல் தேர்ச்சி பெற்று பேஸ் பால் விளையாட்டில் தனது ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டதா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தை எழுதி இயக்கிய கிம் யாங் வா ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களை இயக்கியவர். கொரிய இசையையும் சீன இசையையும் இணைத்து பிரமாதமாக இசையமைத்துள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் கிம் தியோன்.

இப்படத்தில் 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி காட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஜங்க் சங்க் சன். கொரில்லா தோன்றும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை 3டி தொழில்நுட்பத்திலும் எடுத்துள்ளதால், படம் பார்ப்பவர்கள் பேஸ் பால் மைதானத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்துள்ளது.

மொத்தத்தில் ‘மிஸ்டர் கோ’ கொரில்லாவின் கலக்கல்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி