செய்திகள் பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…

பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…

பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்… post thumbnail image
சிரியா:-சிரியாவில் பெண்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல் ஜஸ்ஸிம் என்பவர் ஃபேஸ்புக்கில் புதியதாக ஒரு கணக்கை தொடங்கினார்.இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர் மீது குற்றம் சுமத்திய இஸ்லாமிக் தீவிரவாதிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

இதையடுத்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மட்டும் இம்மாதிரியான சட்டம் உள்ளதை பல நாடுகள் கண்டனம் செய்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி