அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி… post thumbnail image
புதுடெல்லி:-தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். டெல்லி சென்று சேர்ந்த விஜயகாந்த், எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் இல்லம் சென்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த விஜயகாந்த் அவரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தார். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது. மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். சிறை பிடிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் பேசினார்.

காவிரி, முல்வை பெரியாறு பிரச்சினைகளையும் எடுத்து கூறினார். அரிசி மீதான வரியை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வஞ்சித்து விட்டன. தமிழக பிரச்சினைகள் பற்றி பிரதமரிடம் பேசினேன். தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சினை பற்றியும் விளக்கினேன். பிரதமரை தமிழக முதல்– அமைச்சர் இதுவரை சந்திக்க வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார்.மாலை காங்கிரஸ் தலைவர்களையும், விஜயகாந்த் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி