வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…

விளம்பரங்கள்

அமெரிக்கா:-விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுகிறது.

இப்போது வாசனையை பரப்புகிற ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் டேவிட் எட்வர்ட்ஸ் என்பவரின் வழிநடத்துதலுடன் பாரீஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனம்தான் மணம் பரப்புகிற இந்த ஸ்மார்ட் போனை கண்டுபிடித்துள்ளது.

ஸ்டார்ட் போனின் சிப்பில் வாசனைப் பொருள் இணைக்கப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட் போனிலிருந்து இ-மெயில், டுவிட்டர் பதிவு, தகவல்களை அனுப்புகிறபோது, அதைப் பெறுகிறவர் வாசனையை கிட்டத்தட்ட 20 வினாடிகள் நுகர முடியும்.முதலில் மெழுகில் வாசனையை ஈர்க்க வைத்து, அதை மறுவடிவமைப்பு செய்து, சிப்பில் பொருத்துவார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: