போலீஸ் ஸ்டோரி திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

ஜாக்கிசான் தன் மகளைத்தேடி பார் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு மகளை பார்க்கும் ஜாக்கிசான், பார் ஓனரை காதலிப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். தன் மகளை விட அதிக வயதில் இருக்கும் பார் ஓனரை காதலிப்பது ஜாக்கிசானுக்கு பிடிக்க வில்லை. அதனால் தன் மகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த பாரில் ஜாக்கிசான் தவிர 12 பேர் அங்கு வந்திருக்கிறார்கள். திடீர் என்று பார் ஓனர் தன் அடியாட்களை வைத்து ஜாக்கிசான் மற்றும் அங்கு வந்துள்ள 12 பேரையும் அடித்து பணயக் கைதிகளாக ஒரு ரூமில் அடைத்து வைக்கிறான்.இத்தகவலை அறிந்து போலீஸ், பார்க்கு வருகிறது. பார் ஓனரிடம் அனைவரையும் விடும்படி கேட்கிறார்கள். அதற்கு ஓனர் சிறையில் உள்ள ஒரு சாதாரண கைதியை நீங்கள் விடுவிக்க வேண்டும். அப்போது தான் இவர்களை நான் விடுவிப்பேன். இல்லையெனில் ஒவ்வொருவராக கொல்லுவேன் என்று மிரட்டுகிறான்.இறுதியில் போலீஸ் அந்த சாதாரண கைதியை விடுவித்து ஜாக்கிசான் உள்ளிட்ட 12 பேரை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

முந்தைய படங்களில் உள்ள ஜாக்கிசானை நம்மால் காண முடியவில்லை. படத்தில் ஜாக்கிசானின் சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மற்றபடி சென்டிமெண்ட் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜாக்கிசானுக்கு வயதாகி விட்டதால் ஆக்‌ஷன் காட்சிகளை குறைத்துவிட்டார் போல இயக்குனர்.
ஜாக்கிசான் மகளாக வரும் ஜிங் டியன், அற்புதமான நடிப்பு திறனால் அனைவரையும் கவர்கிறார். பார் ஓனராக வரும் லியூ இ வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைக்கிறார்.
சுறுசுறுப்பான ஜாக்கிசானை வைத்துக்கொண்டு மிகவும் மெதுவான திரைக்கதையை வைத்து இயக்குனர் ஷெங் டிங் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். படத்தை விறுவிறுப்பே இல்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘போலீஸ் ஸ்டோரி’ ஏமாற்றமான ஸ்டோரி….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: