அஜீத்தின் வாரீசாக தன்னை நினைக்கும் சிம்பு…

விளம்பரங்கள்

சென்னை:-தல அஜீத்தின் மிகப்பெரிய ரசிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத் படங்கள் வெளியாகும் தினத்தில் முதல் நாளில் முதல் காட்சியை தவறாமல் தியேட்டரில் சென்று பார்த்துவிடும் வழக்கம் உடையவர் சிம்பு.

இதுகுறித்து சிம்பு சமீபத்தில் விடுத்த அறிக்கை ஒன்றில் ‘நான் சிறுவயதில் சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் பரம ரசிகனாக இருந்தேன். என்னுடைய முதல் படம் ‘மோனிஷா என் மோனாலிசா ‘ ரிலீஸ் ஆன தினத்தன்று கூட நான் என்னுடைய படத்தை பார்க்க செல்லாமல், ரஜினியின் படத்தை என்னுடைய நண்பர்களுடன் பார்க்க சென்றேன். அந்தளவுக்கு நான் ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தேன்.தற்போது அஜீத்தை ரஜினியின் மறு அவதாரமாக நான் பார்க்கின்றேன். அஜீத் தான் என ரியல் ஹீரோ. பல சமயங்களில் என்னுடைய கேரக்டரே, அஜீத்தின் கேரக்டரை ஒட்டி அமைந்துள்ளதை நான் கவனித்துள்ளேன்.

இன்னும் சொல்லப்போனால் என் உருவில் நான் அஜீத்தை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.சிம்பு தற்போது மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். வாலு, கவுதம் மேனனின் படம், நயன்தாராவுடன் நடிக்கும் பாண்டிராஜின் படம் என முழுக்க முழுக்க பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் சிம்புவுக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: