அரசியல்,செய்திகள்,திரையுலகம் மீண்டும் கேப்டனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் வைகைப்புயல்…

மீண்டும் கேப்டனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் வைகைப்புயல்…

மீண்டும் கேப்டனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் வைகைப்புயல்… post thumbnail image
சென்னை:-கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கேப்டன் கட்சியையும், தற்போதைய ஆளுங்கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட வைகைப்புயல் நடிகர் தற்போது மனவிரக்தியில் இருக்கிறார்.

கேப்டனுக்கு எதிராக எந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தேமோ, அந்த கட்சியே கேப்டனுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கெஞ்சி கொண்டிருப்பதை பார்த்து, கடும் அப்செட்டில் இருக்கிறாராம் வைகைப்புயல்.இவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போய் இரண்டு வருடகாலம் வாய்ப்பு இன்றி வீட்டில் இருந்தும், அவர்களிடம் இருந்து எவ்வித உதவியும் வராததால் வெறுப்படைந்த வைகைப்புயல் தற்போது போயஸ் கார்டனின் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே பல படங்களில் தன்னுடன் காமெடி ரோலில் நடித்த ‘சிங்க ‘ நடிகர் அந்த கட்சியில் இருப்பதால், அவருடன் முதலில் சமாதானமாகி, அவர் மூலம் ஆளுங்கட்சியில் சேர முயற்சி செய்து வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கேப்டனுக்கு எதிராக களம் இறங்க தயார் என அறிவித்திருக்கும் வைகைப்புயல் இன்னும் திருந்தவில்லையா என கோலிவுடில் கிசுகிசுக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி