செய்திகள் மன்மோகன் சிங்குக்கு ரூ.3.5 கோடி செலவில் விருந்து கொடுத்த ஒபாமா…

மன்மோகன் சிங்குக்கு ரூ.3.5 கோடி செலவில் விருந்து கொடுத்த ஒபாமா…

மன்மோகன் சிங்குக்கு ரூ.3.5 கோடி செலவில் விருந்து கொடுத்த ஒபாமா… post thumbnail image
வாஷிங்டன்: இந்திய பிரதமர், மன்மோகன் சிங், 2009ல் அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபர், ஒபாமா, 3.5 கோடி ரூபாய் செலவில், இரவு விருந்தளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தினர்களை ஆடம்பரமாக உபசரிப்பதில், அமெரிக்க அதிபர், ஒபாமா பிரபலமானவர். இரவு விருந்திற்காக, அமெரிக்க அதிபர், மக்கள் வரிப்பணத்தில் இருந்து, 31 கோடி வரை செலவு செய்யலாம். கடந்த, 2009ம் ஆண்டு, நவம்பரில், அமெரிக்கா சென்ற பிரதமர், மன்மோகன் சிங்கை கவுரவிக்கும் வகையில், ஒபாமா, இரவு விருந்தளித்தார். இந்த விருந்திற்காக, ஒபாமா, 3.5 கோடி ரூபாய் செலவிட்டதாக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சக அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விருந்துகளுக்காக, தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், பொழுதுபோக்கு கலைஞர்களுக்கு, ஏராளமான பணம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி